முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவியை எதிர்த்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2014      சினிமா
Image Unavailable

 

நகரி, ஜூலை 1 - ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் என்ற இடத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் இருந்த பல வீடுகள் எரிந்து சாம்பலானது. 15 பேர் அதே இடத்தில் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று முன்தினம் 3 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான சிரஞ்சீவி காங்கிரஸ் தலைவர்களுடன் நகரம் கிராமத்துக்கு சென்றார்.

ஆனால் கிராமமக்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் சிரஞ்சீவி 10 நிமிடம் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, அதிகாரிகள் அலட்சியம் காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே எரிவாயு குழாய் தீ விபத்து காரணமாக கெயில் நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கஜ்படேல், ராகேஷ் பிரசாத் ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்படவில்லை என்றும் அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று கெயில் நிறுவன டைரக்டர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நிவாரண உதவியாக ரூ. 3.80 கோடி தொகையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்