முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டில் ரூ. 1.14 கோடி பதுக்கிய பாஜக எம்.பி. பதவி பறிப்பு?

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 13 - பீகார் மாநிலம் நவதா தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிராஜ்சிங். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்த போது நிதீஷ்குமார் தலைமையிலான மந்திரி சபையில் கால்நடை துறை மந்திரியாக இருந்தார்.

பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்த பிறகு அவர் மந்திரி பதவியில் இருந்து விலகினார். தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆகி உள்ளார். இவர் தலைநகர் பாட்னாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது. பாட்னாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கொள்ளையர்களிடம் இருந்து 4 சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.14 கோடி ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான நகைகளை மீட்டனர்.

கொள்ளையர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ரூ. 1.14 கோடி பணத்தை கிரிராஜ் சிங் எம்.பி. வீட்டில் கொள்ளையடித்ததாக கூறினார்கள். பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும் எம்.பி. வீட்டில் எடுத்ததாக கூறினார்கள். இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரூ. 1.14 கோடி பணமும் பல லட்சம் மதிப்புள்ள நகைகளும் எனக்கு சொந்தமானது அல்ல என்று கிரிராஜ்சிங் எம்.பி. மறுத்தார். பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அந்த பணமும், நகைகளும் தன் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்றார். ஆனால் அநத் சொந்தக்காரர் யார் என்று இதுவரை கூறவில்லை. இந்த நிலையில் கிரிராஜ்சிங் எம்.பி. வீட்டில் ரூ. 1.14 கோடி கொள்ளையடிக்கப்பட்ட தகவலை பாட்னா போலீசார் வருமான வரித்துறைக்கும், அனுப்பி உள்ளனர். இதனால் கிரிராஜ்சிங் மீது பிடி இறுகி உள்ளது. எம்.பி. தேர்தலின் போது அவர் தன் வேட்பு மனுவில் தன் கையிருப்பாக ரூ. 14 லட்சம் மட்டுமே இருப்பதாக கூறி இருந்தார். அப்படி இருக்கும் போது தற்போது அவர் வீட்டில் ரூ. 1.14 கோடி கிடைத்திருப்பதால் தேர்தல் கமிஷனிடம் அவர் தவறான தகவல் கொடுத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பீகார் மாநில ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். கிரிராஜ்சிங் எம்.பி. தவறான பொய் தகவல் கொடுத்திருப்பதால் சட்டப்படி அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும். மேலும் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது பற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. எனவே அவர் எம்.பி. பதவியை பறி கொடுக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே கிரிராஜ்சிங் எம்.பி. திடீரென தலைமறைவாகி விட்டார். அவரிடம் இதுவரை ரூ. 1.14 கோடி பற்றி போலீசார் விசாரணை நடத்த இயலவில்லை. பாஜக மூத்த தலைவர்களும் இது பற்றி வாயை திறக்கவில்லை. கிரிராஜ்சிங் எம்.பி.யை காப்பாற்ற திரைமறைவில் ஓசையின்றி முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்