முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலத்தால் அழியாத அணையாம் முல்லைப் பெரியாறு அணை

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 24 - நூறு ஆண்டுகளை கடந்த முல்லைப் பெரியாறு அணை காலத்தால் அழியாத அளவுக்கு வலுவாக உள்ளது என்று மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் எல். அறம் வளர்த்தநாதன் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதையும் அணையின் பாதுகாப்பை கண்காணிக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மேற்பார்வை குழு தலைவராக அறம்வளர்த்தநாதன் உள்ளார். டெல்லி தமிழ் சங்கத்தில் முல்லை பெரியாறும் முழு விவரங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ஆங்கிலேயர் அளித்த கொடைதான் முல்லைப் பெரியாறு அணை. குறைவான மழை பொழிவு இருந்த பகுதிகள் பாசனம் பெறும் வகையில் மழை பொழிவு

அதிகம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. 1880 ஆண்டில் திட்டமிடப்பட்டு கர்னல் பென்னிகுயிக் தலைமையில் மிகவும் கடுமையாக மேற்கொண்ட முயற்சியால் முல்லை பெரியாறு அணை உருவானது. அது இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் அளித்த பரிசாக கருதுகிறேன்.

தற்போது நதி நீர் இணைப்பு திட்டங்களை பலரும் பரவலாக பேசி வருகின்றனர். ஆனால் அக்காலத்திலேயே மாநிலங்களிடையே ஓடும் ஆற்று நீரின் ஓட்டத்தை கணக்கிட்டு தொலைநோக்கு பார்வையுடன் முல்லை பெரியாறு அணையை ஆங்கிலேயர்கள் கட்டினர். இந்த அணையை கட்டும் திட்டம் தயாரிக்கப்பட்டவுடன் முதல் முயற்சியிலேயே இத்திட்டம் தோல்வியடைந்தது. இதன் விளைவாக அணை உடைந்தது. ஆனால் அணையை மீண்டும் கட்டுவதற்காக பென்னிகுயிக் அவரது தாயகம் சென்று தனது சொத்துக்களை விற்றார். விடாமுயற்சியுடந் அவர் மேற்கொண்ட பணிகளால் முல்லை பெரியாறு அணை வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளை கடந்து காலத்தால் அழியாத 155 அடி உயரம் கொண்ட அணையாக முல்லை பெரியாறு விளங்குகிறது.

ஆங்கிலேய அரசுக்கும், நிஜாம் அரசுக்கும் ஒரு காலத்தில் எல்லை கோடாக துங்கபத்ரா நதி விளங்கியது. அப்போது அந்த நதியில் கட்டப்பட்ட துங்கபத்ரா அணை, கரிகால சோழன் கட்டிய கல்லணை போன்றவை காலத்தால் அழியாதவையாகும். அது போலவே முல்லை பெரியாறு அணையின் கட்டுமான நுட்பங்களை தற்போதும் நாம் கண்டு வியக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்