முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க்சிஸ்டு கம்யூ. பொதுச்செயலாளர் மீது முதல்வர் வழக்கு

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஜூலை.26 - மார்க்சிஸ்டு கம்யூ. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:_
இம்மாதம் 22_ந் தேதி வெளியான ஓர் ஆங்கில பத்திரிகையில் மார்மார்க்சிஸ்டு கம்யூ. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற தலைமை காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்துள்ளார். இவரது பேட்டி உண்மைக்கு மாறானது. உள்நோக்கம் கொண்டது.
தமிழக அரசுக்கும் முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் அவதூறாக பேட்டி கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவதூறாக பேட்டியளித்த ஜி.ராமகிருஷ்ணன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் தினமலர் பத்திரிகை மீது 2 அவதூறு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 22_ந் தேதி மற்றும் இம்மாதும் 2_ந் தேதி வெளியான இந்த பத்திரிகையில் 40 சதவீதம் தனியாரிடம் அரசு போக்குவரத்து பணிகள் ஒப்படைப்பு என்ற தலைப்பிலும், பஸ் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு என்ற தலைப்புகளில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக்கூடம் நடந்ததாக கூறுவது தவறானது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும், முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறறாக செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்திகளை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாளர் ஆர்.லட்சுமிபதி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்