முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2க்கு 20 லிட்டர் குடிநீர் அக்டோபர் 2-ல் ஆரம்பம்: ஆந்திரா

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

ராஜமுந்திரி, ஜூலை.27 - ஆந்திர கிராமப்புறங்களில் ரூ.2க்கு 20 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம், காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ல் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று ஆந்திர மாநில குழந்தைகல் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் சுஜாதா தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றப் பதவியேற்றப் போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு மக்கல் நலத்திட்டங்கலை அறிவித்தார். அழற்றில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட 20 லி குடிநீர், ரூ.2க்கு வழங்கும் திட்டம், ஊனமுற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு பென்ஷன் திட்டம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்டம் ஆகியவை முக்கியமானவை.

இந்நிலையில், ராஜ்முந்திரியில் நடைபெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் சுஜாதா கூறுகையில், காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ல் இறுந்து, ஊனமுற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்கு கோதாவரி பகுதியில் உள்ள 5200 வீடுகளுக்கு முதல் தவணையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும், விரைவில் என்டிஆர் இலவச மருந்துவ அடையாள அட்டையும் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்