முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனப்பட்டாசு இறக்குமதிக்கு உடனடியாக தடைவிதிக்க கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை.ஜூலை.28 - விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2லட்சம் தொழிலாளர;களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சீனப்பட்டாசுகளின் இறக்குமதிக்கு உடனடியாகத் தடைவிதித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பாராளுமன்றத்தில் ராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார் அதன் விபரம் வருமாறு:
பட்டாசு உற்பத்தியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த பட்டாசு தேவையில் 90சதவீதத்தை சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் தான் உற்பத்தி செய்துவருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தின் படி சீனாவில் தயாராகும் பட்டாசுகளின் இறக்குமதி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. சீனப்பட்டாசுகளின் இறக்குமதிக்கு இந்திய அரசு எந்தவித அனுமதியையும் வழங்கவில்லை. இந்நிலையில் சீனாவில் இருந்து சட்டவிரோதமாக பல்வேறு வழிகளில் ஏராளமான அளவு பட்டாசுகள் கள்ளத்தனமாக வருவதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் 600 முதல்1000கண்டெய்னர்கள் சீனப்பட்டாசுகள் இந்தியத்துறைமுகங்கள் வழியாகவும், நேபாளம் வழியாக தரைமார்க்கத்திலும் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சீனப்பட்டாசு கண்டெய்னர்களில் 5சதவீதம் மட்டுமே முறையாக துறைமுகங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இந்த சீனப்பட்டாசுகளை இந்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டம் 2008ன் படி உடனடியாக ஏலத்தில் விட்டு அவை மறுபடியும் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது ஏற்கமுடியாத ஒன்றாகும். இந்த தொழிலின் மூலம் தான் விருதுநகர் மாவட்டத்தில் 2லட்சம் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர், சீனப்பட்டாசுகள் எந்த அளவுக்கு விலைமலிவாகக் கிடைக்கிறதோ அந்த அளவுக்கு மிகுந்த ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது.
மத்திய அரசு உடனடியாக இந்தப்பிரச்சனையில் போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி, சீனப்பட்டாசுகளின் இறக்குமதிக்கு உடனடியாகத் தடைவிதிப்பதுடன் சீனப்பட்டாசு எந்த அளவுக்கு அபாயம் மிகுந்தது என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். மேலும் இந்தியத்துறைமுகங்களில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு வரும் அனைத்துக் கண்டெய்னர்களையும் ஸ்கேன் செய்வதற்குரிய அடிப்படைக் கட்டமைப்புவசதி போதுமான அளவுக்கு இல்லை என அறிகிறேன். மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகங்களிலும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீனப்பட்டாசு கண்டெய்னர்களை முழுமையாக ஸ்கேன் செய்யும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகளை அமைத்துத் தரவேண்டும். இதன் மூலம் பறிமுதல் செய்யப்படும் சீனப்பட்டாசுகளை ஏலம்விடாமல் அவற்றை அழிக்க உத்தரவிடவேண்டும் வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்