முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு வீரர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி ஒரு பொற்காலம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை - 30 - முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை இந்தியாவிலேயே முதல்நிலை மாநிலமாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வேளாண்துறை,கல்வித்துறை என அனைத்துத்துறைகளிலும் ஒரு புரட்சயை ஏற்படுத்தி வரும் முதல்வர் விளையாட்டுத்துறையிலும் கவனம் செலுத்தி அதன் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கு உகந்த பயிற்சி அளித்தல் தமிழகத்தில் உள்ள மைதானங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல்,விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் சாதனை படைக்கும்போது ஊக்கத்தொகை அளித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். விளையாட்டு துறைக்கென்றே ஒரு தனி அமைச்சரை நியமித்ததும் முதல்வர் ஜெயலலிதாதான். செஸ் போட்டியில் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு கோடிக்கணக்கில் பரிசை அள்ளிக்கொடுத்தவர் முதல்வர் இப்படிப்பட்ட கருணை உள்ளம் கொண்ட முதல்வர் காமன்வெல்த் போட்டியில் தற்போது பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலூர் வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டி கவுரவித்துள்ளார். காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையையும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ எடையையும் சதீஷ்குமார் தூக்கி சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையுள்ள எடையை தூக்கியதன் மூலம் ஒரு புதிய காமன்வெல்த் சாதனையை படைத்துவிட்டார் சதீஷ். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சதீஷ்குமார் பங்கேற்ற முதல் காமன்வெல்த் போட்டியே இதுதான். முதல் போட்டியிலேயே இவர் தங்கத்தை வென்று தமிழகத்திற்கும் இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துவிட்டார். இவர் இதற்கு முன் 2012 மற்றும் 2013 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் பலர் பன்னாட்டு போட்டிகளிலும் பங்கேற்று முத்திரை பதித்தவர். சாதனை படைத்த சதீஷ் வேலூர் சத்துவாச்சாரியில் ஏழை குடும்பத்தில் பிறந்து நகராட்சி பள்ளியில் படித்தவர். அப்பகுதியில் உள்ளவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அளித்த ஊக்கத்தாலும் பயிற்சி கூடத்தில் கிடைத்த பயிற்சியாலும் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார். இத்தனைக்கும் இவருக்கு வயது 22 தான். வரும் செப்டம்பர் மாதம் தென்கொரியாவில் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் இவர் கலந்துகொள்ள இருக்கிறார். சாதனை படைத்த சதீஷுக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக தலைவர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தி உள்ளனர். இவரது சாதனையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா அவருக்கு ரூ.50 லட்சம் ஊக்குத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் சதீஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதமும் அனுப்பி உள்ளார். முதல் போட்டியிலேயே தங்கம் வென்றது நீங்கம் செய்த மகத்தான சாதனை என்றும் இந்த சாதனை தொடரட்டும் என்றும் வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா சதீஷுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு ஊக்கப்படுத்துவதை தமிழக மக்கள், சமூக ஆர்வலர்கள், பிரபல விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்கங்களை சேர்ந்தவர்கள் என அனைவரும் பாராட்டி உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பொற்காலம் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். சதீஷ் குமாரின் பெற்றோரும் முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். முதல்வர் அளித்து வரும் ஊக்கம்தான் தங்கள் மகனின் சாதனைக்கு காரணமாகும் என்று கூறிய அவர்கள், விளையாட்டு வீரர்களை முதல்வர் ஊக்குவிப்பதை மனமாரபாராட்டி உள்ளனர். வரும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்க பதக்கத்தை எங்கள் மகன் பெறுவான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி, விளையாட்டு துறையினருக்கும் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்