முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 5 பேர் கும்பலால் மாணவி பலாத்காரம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.30 - டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்தார சம்வவம் நடந்து வருகிறது. சிறார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையிலும் பெண்கள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறைந்த பாடில்லை.

பள்ளி செல்லும் வழியில், ஜரோதா என்ற பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவியை 5 பேர் கொண்ட கும்பல், சுரேந்தர் பெல்வான் என்பவரது வீட்டிற்கு கொண்டு சென்று, துப்பாக்கி முனையில் கூட்டாக பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின்போது சுரேந்தர் பெல்வான் போலீஸ் உடையில் இருந்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் இருவர் சிறுவர்கள். அதில் நான்கு பேர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர்கள் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், இந்த சம்பவம் ஜூலை 19-ஆம் தேதி நடந்ததாகவும், இது குறித்து வெளியே யாரிடமும் கூறினால், மாணவி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதை, செல்ஃபோன் மூலம் படம் பிடித்துள்ளதாகவும், அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியதால், மாணவி அதனை மறைத்திருந்ததாகவும் பின்னர் சில உடல் உபாதைகள் காரணமாக மாணவி இதனை பெற்றோரிடம் கூறியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்