முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளுவர் வழியில் செயல்படுவேன்: தலைமை நீதிபதி உறுதி

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஜூலை.31 - வள்ளுவன் வழியில் நடுநிலையோடு பாரபட்சமற்ற முறையில் நீதி பரிபாலனம் செய்வேந் என்று தலைமை நீதிபதி சஞ்சய்கிசன் கவுல் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டின் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் தலைமை வக்கீல் ஏ.எல்.சோமையாஜி, தலைமை நீதிபதி கவுலை வரவேற்று பேசினார். அப்போது அவர் சென்னை ஐகோர்ட்டில் 46_வது தலைமை நீதிபதிஆக பதவியேற்றுள்ள தங்களை வரவேற்பதில் பெருமை அடைகிறேன். காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட தலைமை நீதிபதி கவுன்லின் முன்னோர்கள் மொகலாய அரசர்களிடம் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
பஞ்சாபை ஆண்ட ரஞ்சி சிங் மன்னரிடம் இவரது முன்னோர்கள் படைத் தளபதியாக இருந்துள்ளனர். இவரது தாத்தா பஞ்சாப் அரசில் வருவாய் அமைச்சராக இருந்துள்ளார். 1958_ல் பிறந்த கவுல் 1982_ல் பட்டப்படிப்பு முடித்த இவர் வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.
1999_ல் மூத்த வக்கீல் ஆனார். 3.5.2011_ல் டெல்லி ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பதிவேற்றார். 2003_ல் நிரந்தர நீதிபதியானார். 2012_ல் பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டார். இவரைத் தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் டி.செல்வம், மெட்ராஸ் பார் அசோசியேஷன்ஸ் தலைவர் தமிழ்மணி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்லைவர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆகியோர் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.
பின்னர் ஏற்புரை வழங்கிய தலைமை நீதிபதி சஞ்சய்கிசன் கவுல் பேசுகையில் கூறியதாவது:_
சென்னை ஐகோர்ட்டு மிகப்பெரிய பாரம்பரியமிக்க ஒன்றாகும். இந்த ஐகோர்ட்டில் பல சட்டவல்லுநர்கள் வக்கீலாக பணியாற்றியுள்ளனர். முதல் இந்தய தலைமை நீதிபதி முத்துசாமி ஐயர், முதல் அட்வகேட் ஜெனரல் பாசியம் ஐயங்கார், முதல் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜமன்னார் போன்றவர்களை இந்த ஐகோர்ட்டு தான் தந்தது.
இந்த அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு  வந்த சில மாதங்களில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்ததும் இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்புத்தான். பாரம்பரியமிக்க இந்த ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதற்கு வக்கீல்கள், நீதிபதிகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை பைசல் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை பைசல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட்டால் பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக, பயனுள்ளதாக இருக்கும்.
தமிழில் சிறந்த நூலாக திகழும், திருக்குறளில் நீதி எவ்வாறு வழங்கவேண்டும் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். பாரபட்சமற்ற முறையில் நடுநிலையோடு நீதி வழங்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி நீதி பரிபாலனம் செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு வக்கீல்கள், மற்றும் வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்