முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்லாரி வெங்காய சாகுபடி ஊக்குவிக்கப்படும்: அமைச்சர்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.1 - 5000 ஏக்கர் பரப்பளவில்10 மாவட்டங்களில் கிராமங்களில் விவசாயக்குழுக்கள் மூலம்

பெல்லாரி வெங்காய சாகுபடி ஊக்குவிக்கப்படும் என்று அமைச்சர்.அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று வேளான்மைத்துறை மானியக்கோரிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர்.அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,தாக்கல் செய்தார்,அப்பொது அவர் அறிவித்ததாவது

வெப்பமண்டல பழவகைகள் மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளுக்கான மகத்துவமையங்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , தமிழகம் தோட்டக்கலைப் பயிர்களில் உயர் உற்பத்தி அடைய நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு சென்றடையவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, உயர்தொழில்நுட்ப சாகுபடி முறைகளை மாதிரி பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் வெப்பமண்டல பழவகைகளுக்கான மகத்துவமையம் ஒன்று திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திலும், மலைத்தோட்ட காய்கறிகளுக்கான மகத்துவ மையம் ஒன்று ஊட்டியிலும் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , நீர்வளப்பாதுகாப்பினை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதற்காக, கருமண் அதிகம் காணப்படும் 7 மாவட்டங்களில் நீர் செறிவூட்டும் அமைப்புகளும், செம்மண் அதிகம் காணப்படும் 19 மாவட்டங்களில் மண் அரிப்பினை தடுத்து, மண் ஈரத்தினை மேம்படுத்திடும் வகையில் பகுதி வரப்புகளும் மொத்தம் ரூ.13.47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கரும்பு சாகுபடியினைமுழுமையான இயந்திரமயமாக்க இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , வேளாண் பணிகளை உரிய காலத்தில் தடையின்றி மேற்கொள்ள, வேளாண்மையை இயந்திரமயமாக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆண்டுதோறும் அதிக நிதி ஒதுக்கீடு அளித்து வருவதோடு, நடப்பு ஆண்டில், கரும்பு பயிரில் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துப் பணிகளையும் இயந்திரங்கள் மூலம் குறித்த காலத்தே மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், இயந்திரங்களை வாடகைக்கு விடுவதற்காக மாதிரி தொழில் முனைவோர் மையங்கள் 18 எண்கள் ரூ.9.98 கோடி செலவில் அமைக்கப்படும்.

.நிலத்தடி நீர்வளம் பெருக, 1000 பழைய மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைத்தல்

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , தமிழக வேளாண்மையில் இரண்டாம் பசுமைப்புரட்சியினை படைத்திட ஏதுவாக விவசாயத்திற்கு தேவையான அடிப்படை ஆதாரமான நீர்வளத்தினை குறிப்பாக நிலத்தடி நீர்வளத்தினை அதிகரிக்கும் நோக்கோடு பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 1000 மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ரூ.3.00 கோடி செலவில் புனரமைத்து நீர் சேமிப்புத்திறன் மேம்படுத்தப்படும். 5.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , தோட்டக்கலைப்பயிர்களில் புதிய இரகங்கள் மூலம் உற்பத்தியை பெருக்கும் எண்ணற்ற திட்டங்களின் ஒரு அங்கமாக, எலுமிச்சை பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கி மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் மூலம் இலாபகரமான எலுமிச்சை சாகுபடி மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ரூ.4 கோடி செலவில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , தோட்டக்கலையின் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வண்ணம், செயல்விளக்கங்களாக செய்து காட்ட ஏதுவாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் தோட்டக்கலை செயல்விளக்க மாதிரிப் பண்ணை ஒன்றும், இராமநாதபுர மாவட்ட விவசாயிகளுக்கு தரமான இனத் துhய்மை வாய்ந்த நடவுச் செடிகளை உரிய சமயத்தில் தேவையான அளவு வழங்க ஓரியூர் கிராமத்தில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணையும் மொத்தம் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி தோட்டக்கலையில் புரட்சியை ஏற்படுத்தி சத்தான, தரமான பழங்களை உற்பத்தி செய்வதின் மூலம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நுகர்வோர் பயன்பெறவும், தரமான திசு வளர்ப்புச் செடிகளை விவசாயிகளுக்கு வழங்கும் நோக்குடன், தேனி மாவட்டத்தில் இரண்டு புதிய திசுவளர்ப்புக் கூடங்கள் நிறுவுவதுடன், கோயம்புத்துhர், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 5 திசு வளர்ப்புக் கூடங்களை புனரமைக்கவும் மொத்தம் ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , தமிழகத்தில் வெங்காயத்தின் தேவையை உள்நாட்டிலேயே சாகுபடி செய்து, பூர்த்தி செய்ய ஏதுவாக நடப்பு ஆண்டில் 5000 ஏக்கர் பரப்பளவில் பத்து மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் விவசாயக்குழுக்கள் மூலம் பெல்லாரி வெங்காய சாகுபடி ஊக்குவிக்கப்படும். இதற்காக ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, பாரம்பரியம் வாய்ந்த மற்றும் வெளிநாட்டு மா மற்றும் கொய்யா இரகங்களை பாதுகாத்துப் பராமரிக்க, சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்றதொகுதி கருமந்துறையில் உள்ள அரசு பெரும் பழப்பண்ணையில் வயல் மரபணு வங்கி ஒன்று ரூ.0.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தும் திட்டப்பயன்களை திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் எளிதில் பெறும்வகையில், திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறைக்கு புதிய கட்டிடம் ஒன்று ரூ.0.825 கோடி செலவில் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்