முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல்வரை விமர்சித்த சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக.12 - கேரளம் மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளாவில் விமான நிலையம் அமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலையம் அமைத்தால் ஆரன்முளா பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஐகோர்ட் விமான நிலையம் அமைக்க இடைக்கால தடைவிதித்துள்ளது. ஆனாலும் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி கூறி வருகிறார்.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது முதல்வர் உம்மன் சாண்டி சுற்றுச் சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டார். அவருக்கு சிலர் தவறான தகவல்கள் தந்த தின்பேரில் அறிவில்லாதது போல் பேசுகிறார். ஆரன் முளாவில் விமான நிலையம் தேவையில்லை, என்று அவர் கூறினார். நடிகர் சுரேஷ் கோபியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் வெளியான அவரது படத்தை திரையிடுவதற்கும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரசார் கூறினர்.

இந்நிலையில் நடிகர் சுரேஷ்கோபி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் உம்மன்சாண்டியை அவமானப்படுத்த நான் முயற்சிக்கவில்லை. தகவல்களை சேகரிக்கும் போது உம்மன் சாண்டிக்கு சில தவறுகள் ஏற்பட்டுள்ளது என்று மட்டும்தான் கூறினேர். உம்மன்சாண்டிக்கு அறிவில்லை என்று நான் கூறவில்லை. எனது கரு்த்துகள் அவரை வேதனைப்படுத்தியதாக அமைச்சர் வஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். எனவே நான் மன்னி்ப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுரேஷ்கோபி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்