முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 29– தமிழகத்தில் காலியாக உள்ள மாநகராட்சி மேயர் பதவிகள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் இதர உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 18ந் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க.வசம் இருந்த திருநெல்வேலி மேயராக பதவி வகித்த விஜிலா சத்யானந்த் ராஜ்யசபா, தூத்துக்குடி மேயராக உள்ள சசிகலா புஷ்பா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்காளாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தங்களது மேயர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் ஒரு சில மாநகராட்சி மேயர்களும், நகராட்சி தலைவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

நீண்ட காலமாக காலியாக உள்ள இப்பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதன் மூலம் புதிய மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது .

தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர் மற்றும் சங்கரன்கோவில் நகராட்சிகள் உள்பட ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 28.8.2014 முதல் துவங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4.9.2014. தேர்தல் 18.9.2014 அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 22.9.2014 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். சனிக்கிழமையும் வேட்பு மனுக்கள் பெறப்படும் என மாநில தேர்தல் ஆணைய செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்