முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கௌடா மகன் மீதான வழக்கில் சட்டப்படி நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், ஆக.30 - ரயில்வே அமைச்சர் சதானந்தா கௌடாவின் மகன் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறுகையில், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தலையிடாது. விசாரணை அதிகாரி தனது பணியை சுதந்திரமாக செய்வார். இந்த விவகாரத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாகக் கூறப்படுவது தவறு, என்றார்.

கர்நாடக மாநில மகளிர் ஆணையத் தலைவர் மஞ்சனா மானசா கூறுகையில், கார்த்திக் மீது புகார் கொடுத்துள்ள நடிகையின் சகோதரியுடனும், அவரது குடும்பத்தினருடனும் பேசினேன். இந்த விவகார்ததில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசுக்கு நானும் கடிதம் எழுதவுள்ளேன், என்றார்.

தன் மகன் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து சதானந்த கௌடா, கேரள மாநிலம் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அவரை சிக்க வைப்பதற்காக கொடுக்கப்பட்ட பொய் புகாராகும். இதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும், இந்த விவகார்ததில் நான் தலையிட மாட்டேன், என்றார். கன்னடத் திரைப்பட நடிகை ஒருவர், பெங்களூரு ஆர.டி.நகர் காவல் நிலையத்தில் சதானந்த கௌடாவின் மகன் கார்த்திக்கு எதிராக புகார் அளித்தார். அதில் கார்த்திக் என்னைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அதை மறைத்துவிட்டு, தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அவர்கள் இருவருக்கும் மாவட்டம் குஷால்நகரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்