முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால அறிக்கை

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.30 - ஐ.பி.எல். சூதாட்டம், ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக, முகுல் முத்கல் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. செப்டம்பர் 1-ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐ.பி.எல். அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் அடங்கிய மூவர் கமிஷனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில், முகுல் முத்கல் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால விசாரணை அறிக்கையை நேற்று சும்பீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்