முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூரில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.1 - திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவர் தனது தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

(திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா)

24–ந்தேதி மாலை 5 மணிக்கு காட்டூர்–கலையரங்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிட அடிக்கல் நாட்டுகிறார்.

25–ந்தேதி காலை 10 மணிக்கு கொரடாச்சேரி–பொது விநியோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடை திறந்து வைக்கிறார்.

பூண்டி நினைவு அறக்கட்டளை சார்பில் கொரடாச்சேரியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் அரசு இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கக்காசு வழங்குகிறார்.

இரவு 7 மணிக்கு திருவாரூர்– மாவட்டக் கழகச் சார்பில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

26–ந்தேதி காலை 10 மணிக்கு கூத்தாநல்லூர்– பொது விநியோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடை திறந்து வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்