முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் தங்கத் தகடு: அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, செப்.11 - திருப்பதி ஏழுமலையான் கற்ப கோயிலில் தங்க தகடுகள் பொருத்துவது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கற்ப கோயில் மற்றும் சன்னதி சுவர்களில் தங்க தகடுகள் பொருத்த கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு அனந்த சுவர்ணமயம் திட்டம் என பெயர் சூட்டப்பட்டது. மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக ரூ. 13 கோடி மற்றும் 115 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். இதற்காக திருமலையில் உள்ள அருங்காட்சியகத்தில் செப்புத் தகடுகள் தயாரிக்கப்பட்டு அதற்கு தங்க முலாம் பூசும் பணிகளும் நடைபெற்றது.

இத்திட்டம் மூலம் கோயில் வளாகத்தில் உள்ள சுவர்களின் மீது இருக்கும் கல்வெட்டுகள் அழிந்து போகும் என்றும், கற்ப கோயில் சுவற்றில் துளைகள் போடுவதால் சுவர் பலவீனப்படும் என்றும் தொல்லியல் நிபுணர் குழு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். இப்பிரச்சிசனை ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. இதற்கான விளக்கமும் திருப்பதி தேவஸ்தானம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டதாக தேவஸ்தானம் அறிவித்தது.

இந்நிலையில், சமீபத்தில் திருப்பதிக்கு வந்த ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு, நீதிமன்ற ஆட்சேபணைக்கு உட்பட்டு இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார். இது குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் கூறும்போது, "வேலூரில் உள்ள கோபுரம் தங்க கோயிலை போன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் கற்ப கிரக சன்னதி முழுவதும் தங்க தகடுகள் பொருத்த வேண்டும் என கடந்த 2008-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. சில காரணங்களால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் இத்திட்டம் பரிசீலிக்கப்படும். என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்