முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 25 முதல் நவராத்திரி விழா

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, செப்.15 - மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 25-ஆம் தேதி முதல் நவராத்திரி கலை விழா தொடங்குகிறது.

இதையொட்டி அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் சிறப்புக் கொலு அமைக்கப்பட்டு வருகிறது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சமீபத்தில் தான் புட்டுத் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில், வரும் 25-ஆம் தேதி முதல் நவராத்திரிக் கலை விழா ஆரம்பமாகிறது.

விழாவை முன்னிட்டு, அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு பொம்மைக் காட்சிகள் அமைக்கப்படவுள்ளன. 11 கொலுக் காட்சிகள் இடம் பெறவுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட தலைப்பின் கீழ் கொலு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வெற்றியைக் குறிக்கும் வகையில் ஜெய மங்களம் எனத் தொடங்கி சுப மங்களம் என கொலு காட்சியை நிறைவி செய்யவுள்ளனர். கொலுக்காட்சியில் இடம் பெறும் சுவாமி, அம்மன் திருவுருவங்கள் அனைத்தும் மங்களகராமகவே இருக்கும் வகையில் பொம்மைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அருள்மிகு மீனாட்சி பிறப்பு, திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் என மங்கள நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வகையில் கொலு இடம் பெறும். குழந்தைகளைக் கவரும் வகையில் மதுரை சித்திரைத் திருவிழாவில் மாசி வீதிகளில் நடைபெறும் தேரோட்டம் செயல் முறை மாதிரியாகவும், தெப்பத் திருவிழாவில் சுவாமி உலா, அருள்மிகு முருகன் உலகைச் சுற்றி வருவது போன்ற பல அம்சங்களும் இடம் பெறவுள்ளன. திருவிழாக்களின் போது அம்மன், சுவாமி வலம் வரும் சிறப்பு வாகனங்கலும் கொலுவில் இடம் பெறவுள்ளன. நவராத்திரிக் கலை விழாவை முன்னிட்டு கொலு அமைக்கும் பணி, சிறப்பு அலங்காரப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் ஆலோசனையின் பேரில், கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் மேற்பார்வையில், கோயில் பொறியாளர் குமரன் உள்ளிட்டோர் கொலு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த மயிலை, கயிலை மூவர் குழுவினர் கொலு அமைக்கின்றனர். குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் வகையில் கொலு அமைக்கப்படவுள்ளது. அக்டோபர் 3-ஆம் தேதி நவராத்திரி கலை விழா நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்