முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.களுக்கு சிறப்பு சலுகை ரத்து

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.18 - விமான நிலையங்களில் விவிஐபிக்கள் இனிமேல் வழக்கமான பந்தாவுடன் செல்ல முடியாது. அவர்கள் வழக்கமான பாதையை விட்டு சிறப்பு பாதையில் செல்லும் சலுகைகளை ரத்து செய்ய மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விமான நிலையங்களில் அரசியல் தலைவர்கள் உள்ளிக்ட்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது வழக்கம். விமான நிலையத்திற்குள் அவர்கள் நுழையும்போது ஏராளமான அதிகாரிகள் காத்திருந்து அவர்களை வரவேற்பார்கள். இதனால், பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதோராவுக்கு சிற்பபு சலுகைகள் அளிக்கப்பட்டதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், விமான நிலையங்களில் விவிஐபிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதால் மற்ற பயணிகள் பாதிக்கக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கும், ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளுக்கும், ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் அசோக் கஜபதி ராஜு ஒர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அமைச்சர்கள் உள்பட அரசியல் பிரமுகர்களை வரவேற்பதற்காக ஏராளமானோர் வருவதாலும், அதிகாரிகள் மொத்தமாக கூட நிற்பதாலும் மற்ற பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விவிஐபிக்களையும் மற்ற பயணிகளை போலவே நடத்த வேண்டும். விமான நிலையத்திற்கு நான் வரும் போது என்னை வரவேற்க ஏரிரு அதிகாரிகள் வந்தால் போதும். அதே போல், விமானத்திற்குள் ஏறச் செல்லும் போது வழக்கமாக பயணிகள் பயன்படுத்தும் விமான நிலைய பஸ்சையே நானும் பயன்படுத்துவேன். விமானம் வரை தனிவாகனம் எனக்கு தேவையில்லை. மற்ற சிறப்பு சலுகைகளும் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு விதிமுறைகளில் எந்த மாற்றமும் இருக்க கூடாது.

இவ்வாறு அவர் அந்த தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்