முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லவ் ஜிகாத்துக்கு எதிரான பிரச்சாரம்: இந்துத்துவா அமைப்புகள்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.19 - உத்திரப் பிரதேச மாநில இடைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையிலும் லவ் ஜிகாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று இந்துத்துவா அமைப்புகள் கூறியுள்ளன.

கடந்த சில நாட்களாக லவ் ஜிகாத் என்ற பிரயோகம் பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் பரவலாகி வருகிறது. இந்துப் பெண்களை முஸ்லிம் வாலிபர்கள் காதல் வலையில் வீழ்த்துவதாகக் கூறி வரும் இந்துத்துவா அமைப்புகள் இதனை லவ் ஜிகாத் என்று பெயரிட்டுள்ளன. இதற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த லவ் ஜிகாத் பிரச்சாரம் ஓய்ந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்தல் பின்னடைவு என்பது வேறு, லவ் ஜிகாத் என்பது வேறு என்று அங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் கூறியுள்ளன.

இது குறித்து லவ் ஜிகாத் பிரச்சாரத்தில் தீவிரமாக இயங்கி வரும் அமைப்பை நடத்தும் தொழிலதிபர் அஜய் தியாகி கூறியுள்ளதாவது, தேர்தல் பின்னடைவுக்கும் இதற்கும் தொடர்பில்லை, எனவே நாங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் மேலும் கவனமும் தீவிரமும் செலுத்துவோம். மஹந்த் ஆதித்யநாத்ஜி நொய்டா, லக்னோ தொகுதிகளில் லவ் ஜிகாத் பிரச்சாரம் மேற்கொண்டார் அந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.

அவர் மேலும் சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருந்தால் வெற்றிகள் அதிகரித்திருக்கும் என்றே நான் கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்