முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹரியானா தேர்தல்: வாரிசுகளை நிறுத்த தலைவர்கள் முயற்சி

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சண்டீகர்,செப்.20 - ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 15 ல் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல், பல பாஜக தலைவர்கள் தம் வாரிசுகளை போட்டியிட வைக்க முயல்கின்றனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், தன் சகோதரியான வந்தனாவை சாபிதோன் தொகுதியில் போட்டியிட வைக்க முயல்வதாக கூறப்படுகிறது.

திட்டக் கமிஷனின் மத்திய இணை அமைச்சரான ராவ் இந்திரஜித்தும் தன் மகளான ஆர்த்தி ராவை இங்குள்ள ரிவாரி தொகுதியில் களமிறக்க வாய்ப்பு தரும்படி கட்சியில் கேட்டிருக்கிறார்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் கிருஷண்பால் குர்ஜர் தன் மகனான தேவேந்தர்பால் குர்ஜருக்காக திகாவ்ன் தொகுதியைக் கேட்டு வருகிறார்.

வட கிழக்கு பகுதி நலன் துறையின் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கும் தன் மைத்துனரான அரிதாமான் சிங்கை சோஹா தொகுதியில் வேட்பாளராக்க முயல்கிறார்.

பாஜகவின் எம்பிக்களில் ரத்தன்லாலின் மனைவி பந்தோ கத்தரியா, அஷ்வினி சோப்ராவின் மனைவி கிரண் சோப்ரா எனப் பலரும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

ஹரியானா பாஜக தேர்தல் பொறுப்பாளரான கைலாஷ் விஜய் வர்கியா மற்றும் ஜெக்தீஷ் முகி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக்கின் தலைவர் மனோகர்லால் கத்தார் ஆகியோர் எக்காரணத்தை கொண்டும் கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடியாது என உறுதிபடக் கூறியுள்ளனர்.

இது குறித்து ஹரியானா மாநில பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ‘வாய்ப்பு கேட்கும் கட்சி தலைவர்கள் தாம் பரிந்துரைக்கும் உறவினரின் வெற்றி உறுதி எனவும், இதுபோல் வெற்றி வேட்பாளர்களுக்கு கட்சியின் கொள்கையில் சற்று மாற்றம் செய்வதில் தவறில்லை எனவும் வாதிடுகின்றனர். தம் வாரிசுகளுக்கு எப்படியாவது வாய்ப்புகளை பெற்றுத் தரும் பொருட்டு தேசிய நிர்வாகிகள் மூலமாக வற்புறுத்தி வருகின்றனர்’ என்றனர்.

மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநில சட்டசபைக்கு பாஜக சார்பில் இதுவரை 43 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஆளும் இம்மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்