முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு பா.ஜ.க. இரங்கல்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.21 – பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சின்னஞ்சிறு பாலகனாக இருந்த போதே, கர்நாடக இசையில், எவரும் பயன்படுத்தாத, மேற்கத்திய இசைக்கருவியான மாண்டலினில், தன் வித்தகத்தைக் காட்டி வியக்க வைத்தவர் ஸ்ரீநிவாஸ். அன்னாரது இழப்பு, தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், இசை உலகிற்கும், மாற்று ஏதுமில்லா மனச்சுமையை ஏற்படுத்தும் பேரிழப்பாகும்.

மாண்டலின் ஸ்ரீனிவாசை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் இசைக்கு ஆற்றிய தொண்டும், மீட்டிய இசையும், காற்றுள்ளவரை இறவாப்புகழுடன் இருக்கும். அவர் ஆன்மா அமைதிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன். என் சார்பிலும், பா.ஜ.க. சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்