முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல் கொய்தா முயற்சியை முறியடிப்போம்: தரூண் கோகோய்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

கௌஹாத்தி, செப்.22-

இந்தியாவில் கால்பதிக்கப் போவதாக அல் கொய்தா தீவிர வாத அமைப்பு வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, அசாமில் நுழைய அல் கொய்தா முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் தருண் கோகோய் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

"அசாமில் நுழைய அல் கொய்தா முயற்சிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தடுக்க அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறோம். அவர்கள் 'உல்ஃபா' தீவிரவாதிகளுடனும் தொடர் பில் இருக்கலாம். இந்த இரு அமைப்புகளும் ஒன்றை யொன்று விமர்சிக்க வில்லை. எனவே, நேரடியாகத் தொடர்பு இல்லையென்றாலும், இவர் களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கலாம். துர்கா பூஜையின் போது ஏதேனும் அசம்பா விதங்கள் நடைபெறலாம் என்று தகவல் கிடைத் துள்ளது. அதை முறியடிக்கவும் தயாராக உள்ளோம். மேலும், அவ்வப்போது நிகழும் போடோ லாந்து பிரச்னை களும் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு வாய்ப்பாக அமைகின்றன".

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்