முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாதம் விடுப்பு கேட்ட நளினி மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 23 – தந்தையை கவனித்துக் கொள்ள ஒரு மாதம் விடுப்பு கேட்டு நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் இருப்பவர் நளினி.இவர் கடந்த ஆண்டு, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘என்னுடைய தந்தை (ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர்) சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.

அவருக்கு தற்போது 90 வயது ஆகிவிட்டது. படுத்த படுக்கையாக இருக்கும் என் தந்தையுடன், அவரது கடைசி காலத்தில் உடன் இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்கு ஒரு மாதம் காலம் (பரோல்) விடுப்பு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து வந்தனர். அப்போது, அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நளினியை தந்தையுடன் ஒரு மாதம் தங்க அனுமதித்தால், திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மேலும், நளினி தன்னுடன் இருக்க அவரது தந்தையே விரும்பவில்லை.

எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்