முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்காவில் எபோலா நோய் பாதிப்பு 3 மடங்காக வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க் , செப்.24 - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்றை தடுக்க முயற்சி எடுக்காவிட்டால், அதன் பாதிப்பு மும்மடங்காகும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றை எபோலா நோய் கடுமையாக தாக்கி உள்ள நிலையில், சர்வதேச நாடுகளுக்கும் இந்த நோய்க் கிருமி மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதுவரை, மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டும் எபோலாவால் 2,800-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த நோய்க்கு எதிரான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால், வரும் நவம்பர் மாதத்திற்குள் எபோலா தொற்று மும்மடங்காகி, சுமார் 20,000 பேரை தாக்கும் என்றும், சமீபத்திய நிலவரப்படி வாரத்திற்கு நூற்றுக்கணக்கானோரை பாதித்த நோய், தற்போது ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்