முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை வ.மண்டல அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 24:

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல புதிய கட்டிட அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மதுரை மாநகராட்சியில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மண்டலம் 2 அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டத்தின் கீழ் 81 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக தலா ரூ.25000 வீதம் ரூ.20.25 லட்சமும், மதுரை மாநகர் பகுதியில் படித்த ஏழை இளைஞர்களுக்கு திறன் பயிற்சி 4500 நபர்களுக்கு வழங்குவதற்கு ரூ.3.21 கோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் வழங்கினார். இதனை மதுரை வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு மதுரை மாநகராட்சியின் புதிதாக திறக்கப்பட்ட வடக்கு மண்டலம் 2 அலுவலக கட்டிடத்தில் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்டிடத்தை பார்வையிட்டு சுழல்நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் கதிரவன் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், துணை மேயர் கு.திரவியம், துணை ஆணையாளர் செல்வி. மீனாட்சி, மண்டலத் தலைவர்கள் கே. ஜெயவேல், பெ. சாலைமுத்து. நகரப்பொறியாளர் மதுரம், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, செல்லப்பா, தேவதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் நீ. சித்திரவேல், உட்பட மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்