முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீன் மனு மீண்டும் தள்ளிவைப்பு: அதிமுகவினர் அதிர்ச்சி

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, அக் 2:

தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூ ர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முதலில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை  6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு விசாரணையும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட் விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இதற்கான உத்தரவை வெளியிட்டார்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அதிமுகவினர் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தொண்டர்கள் உண்ணாவிரதம், வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. திரையுலகினரும் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். முதல் முறை ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டதால் அதிமுகவினர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். என்றாலும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மூலம் ஜெயலலிதா நேற்று ஜாமீனில் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த மனு விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்