முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிட்டருக்கு ரூ.10-வது டீசல் விலையைக் குறைக்க கோரிக்கை

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 17 - பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டீசல் விலையை குறைந்த பட்சம் லிட்டருக்கு ரூ. 10 என்ற அளவிலாவது குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 அளவிலாவது குறைக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 89 டாலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது.

அதிக பட்சமாக ஒரு பேரல் 2008-ல் 140 டாலராகவும் அதன் பின்பு கச்சா எண்ணெய் விலை 107 டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லிட்டர் டீசல் 45 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. தற்சமயம் சுமார் 63 ரூபாய் அளவு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையை ஒப்பிட்டு டீசல் விலையை நிர்ணயம் செய்தால் இப்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 50-க்கும் குறைவாக விற்கப்பட வேண்டும்.

எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், பண வீக்கத்தைக் குறைக்கும் விதமாகவும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளைக் கணிசமாக குறைக்க வேண்டும்.

குறிப்பாக டீசல் விலையை வழக்கம் போல் சிறிய அளவில் குறைக்காமல் குறைந்தபட்சம் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிற்காவது குறைப்பதே நியாயமாக இருக்கும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்