முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 16-முதல் மதுரையில் ஆட்டோக்களுக்கு புதிய வாடகை

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.19 - ஆட்டோக்களுக்கு புதிய வாடகை கட்டணம் கடந்த 16ம் தேதி முதல்அமுல்படுத்த்ப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஆட்டோக்களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் சென்னையில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல் புதிய கட்டணத்தை மதுரையிலும் அமுல்படுத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி தமிழகம் முழுவதும் திருத்திய ஆட்டோ கட்டணம் முதல் 1.8கி.மீக்கு ரூ.25ம், கூடுதலாக வரும் ஒவ்வொரு கிமீட்டருக்கும் ரூ12 வீதமும், காத்திருக்கும் நேரம் நிமிடத்திற்கு ரூ.3.50ம் இரவு நேர கட்டணமாக(இரவு 11மணிமுதல் காலை 5மணிவரை) பகல்நேர கட்டணத்தை விட கூடுதலாக 50சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் மதுரையில் கடந்த 16ம் முதல் அமுலுக்கு வந்து விட்டது.

மேலும் மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோ உரிமையாளர்களும் மற்றும் ஓட்டுனர்களும் 45 நாட்களுக்குள் பழைய கட்டண மீட்டர்களை எடுத்துவிட்டு, புதிய மின்னணு கட்டணமீட்டர்களை பொருத்தி அதில் புதிய கட்டணத்தை திருத்தி சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பித்து முத்திரை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்