முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் எரிவாயு மானியம் பெற புதிய நடைமுறை

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 20 - சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் 15ம் தேதி அறிமுகமாகிறது.

இதன்படி சமையல் எரிவாயு மானியத்தை ஆதார் அட்டை எண் இல்லாமல் நேரடியாக எந்தவொரு வங்கிக் கணக்கு மூலமாகவும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். நேரடியாக மானியம் வழங்கும் திருத்தப்பட்ட இந்த திட்டம் முதல் கட்டமாக 54 மாவட்டங்களில் அடுத்த மாதம் 15ம் தேதியும், எஞ்சிய பகுதிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியும் அமல்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது,

முந்தைய ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்த ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட நேரடி மானியம் வழங்கும் திட்டத்தால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் பல வாடிக்கையாளர்கள் மானியம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் ஆதார் அட்டைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் அட்டை எண்ணுக்கு அவசியமின்றி வாடிக்கையாளர் வைத்துள்ள எந்தவொரு வங்கி கணக்கு மூலமும் சமையல் எரிவாயு மானியம் பெறும் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கி கணக்கில் மானியம் பெற்ற வாடிக்கையாளர்கள் அதே வங்கி கணக்கில் இத்திட்டத்தின் பலனை அடுத்த மாதம் 15 ம் தேதி முதல் பெறலாம். மற்ற வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க 3 மாத காலம் அவகாசம் தரப்படுகிறது. மக்கள் நிதி(ஜன்தன்) திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கியவர்கள் அதனையே பயன்படுத்தலாம் என்றார் அருண்ஜெட்லி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்