முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதந்திகளை நம்ப வேண்டாம்: அப்துல் கலாம்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக்.24 - தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடந்த 15ம் தேதி தனது 83வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதாகவும், அவரின் நிலைமை மோசமாகிக் கொண்டே இருப்பதாகவும் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வேகமாக பரவியது. கலாம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வங்கதேசம் சென்றபோது தான் இந்த தகவல் பரவியது.

இந்நிலையில் இது குறித்து கலாம் அலுவலகம் கூறுகையில்,

அப்துல் கலாம் நலமாக உள்ளார். எஸ்.எம்.எஸ். மூலம் பரவிய பொய்யான தகவல் ஃபேஸ்புக்கிலும் பரவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து அறிந்த கலாம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சில தகவல் பரவியுள்ளது. இது முற்றிலும் பொய்யானது. வதந்திகளை நம்பாதீர்கள். அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்