முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை காமராஜர் பல்கலை.யில் 58,470 பேருக்கு பட்டம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக் 30: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 48வது பட்டமளிப்பு விழாவில் 58,470 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் கவர்னர் கே. ரோசய்யா 410 பேருக்கு பட்டங்களை நேரில் வழங்கி பாராட்டினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக 48வது பட்டமளிப்பு விழா டாக்டர் மூ .வ. அரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், 2013-14ம் ஆண்டுக்கான பல்கலைக் கழகத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். கவர்னர் ரோசய்யா விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில் பல்கலைக் கழகம் மற்றும் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூ ரிகள், பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில் பயின்ற 58,470 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இதில் இளநிலை மற்றும் முதுகலையில் பருவ தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற 42,350 பேருக்கும், அல்பருவமுறையில் இளநிலை மற்றும் முதுகலையில் தேர்ச்சி பெற்ற 15,710 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டை விட பட்டங்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் அதிகமாகும். விழாவில் பல்கலைக் கழக பேராசிரியர்களான கே. பிச்சுமணிக்கு டி.எஸ்.சி பட்டத்தையும், டி. டேனியலுக்கு டி.லிட் பட்டத்தையும், 342 பேருக்கு முனைவர் பட்டங்களையும், 67 பேருக்கு பதக்கங்களையும், பரிசுகளையும், ஒருவருக்கு மெரைன் மற்றும் சுற்றுச்சூழல் படிப்பில் சிறந்த முனைவர் பட்ட ஆய்வறிக்கை சமர்ப்பித்ததற்கான பரிசு உள்ளிட்ட 410 பேருக்கு பட்டங்களை கவர்னர் ரோசய்யா வழங்கினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட உயர்கல்வி துறை அமைச்சர் ப. பழனியப்பன் சிறப்புரையாற்றுகையில், பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பசுமை வளாக திட்டம், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தல், உயர் கல்விக்கான பல்வேறு படிப்புகள் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் இதற்கு முயற்சி எடுத்த துணைவேந்தரையும் பாராட்டினார்.

பதிவாளர் ராஜசேகர், ஆட்சிகுழு உறுப்பினர்கள், ஆட்சிமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, பல்கலைக் கழக வளாகத்தில் யுஜிசி, டிஎஸ்டி,என்ஆர்சி, பிஎஸ் பயிற்சிக்கான புதிய கட்டிடத்தை கவர்னர் ரோசய்யா திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்