முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு சிறை

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - மன வளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு, பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2012-இன் கீழ் சென்னையில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பாகும்.
சென்னை கிண்டியில் சி்ப்பாட் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தின் கல்லூரியில் சமையல் வேலை செய்பவர் கருப்பையா (55). அந்த நிறுவனத்தின் அருகில் நடைபாதையில் வசிக்கும் குழந்தையிடம் கடந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி கருப்பையா தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், கருப்பையா மீது பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2012-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ் முன்பு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் கௌரி அசோகன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனம் ஆகியுள்ளது.
அதனால், அவருக்கு பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2012-இன் கீழ் ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து