முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 30ம் தேதி மகர விளக்கு பூஜை விழா தொடங்கியது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்தனர். மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் நிகழ்ச்சி வரும் 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

அன்று சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரியும் ஜோதியை காண பக்தர்கள் மலை பிரதேசம் எங்கும் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். மகர விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று தொடங்கியது. இதற்காக பந்தளம் ராஜ குடும்பத்தின் திருவாபரணங்கள் சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறும்.

இதற்காக கோவிலில் சுத்தி பூஜைகள் தொடங்கி உள்ளன. இவை தந்திரி கண்டரரூ ராஜீவரரு தலைமையில் நடந்து வருகிறது. வாஸ்து ஹோமம், வாஸ்து பலி ஆகியவை நடந்த பின்பு இன்று மதியம் பிம்ப சுத்தி கலச பூஜையும் பின்னர் பஞ்சகம் பூஜித்தலும் நடக்கிறது. 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்த பின்பு இரவு 7.30 மணிக்கு மகர சங்கரம பூஜையுடன் மகர விளக்கு பூஜைகள் நிறைவுக்கு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக சபரிமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து