முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பு பிரார்த்தனை நாளாக கடைபிடிக்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு சிறப்பு பிரார்த்தனை நாளாக கடைப்பிடிப்பதென அண்ணா திமுக சிறுபான்மை நலப்பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அண்ணா திமுக  சிறுபான்மையினர் நலப் பிரிவு நிர்வாகிகள் நிர்வாகிகள் மற்றும்மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிறுபான்மைப்பிரிவு தலைவர் அன்வர் ராஜா எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசியல் ஆலோசகர் சி.பொன்னையன்,அமைப்புசெயலாளர் பி.எச்.பாண்டியன்,  கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா ,சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டீன் செல்வராஜ், துணைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் எம்.எல்.ஏ ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின்67-ஆவது பிறந்த நாளில்  தமிழ் நாடு முழுவதும் ஒரே நாளில் குறிப்பிட்டநேரத்தில் """"சிறப்பு பிரார்த்தனை நாள்"" என்ற தலைப்பின் கீழ் தமிழ் நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஒரே நேரத்தில் 2 ரக்காயத்து நபில் தொழுகை நடத்தி பிரார்த்திக்கவேண்டும் என்றும், அது போல குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் நாடுமுழுவதும் உள்ள, மாவட்டந்தோறும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைநாள் கடைபிடிக்க வேண்டும்   என  அண்ணா திமுக  சிறுபான்மையினர் நலப் பிரிவுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின்  முடிவில் அண்ணா திமுக சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல்ஜலீல் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து