முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

129 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ-யை வீழ்த்தியது பாக்.,

புதன்கிழமை, 4 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் - உலகக் கோப்பை லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் யுஏஇ அணியை 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால் பாகிஸ்தானோ அதிரடி காட்டி 339 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேப்பியர் மைதானத்தில் நேற்று காலை மோதலை தொடங்கின. டாசில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் முகமது தௌகிர் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

முதலில் ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி 50 ஓவர்கள் இறுதியில் 339 ரன்களை குவித்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் அகமது செஷாத் 93 ரன்கள் குவித்தார். ஹரிஷ் சொகைல் 70 ரன்களும், சோயிப் மசூத் 45 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 65 ரன்களும் குவித்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காண்பித்த அப்ரிடி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் வகாப் ரியாசுடன் களத்தில் நின்றார். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய யு.ஏ.இ அணியில், அம்ஜத் அலி 14 ரன்கள், ஆன்ட்ரி பெரேன்கர் 2 ரன்கள் எடுத்தனர்.  கிருஷ்ண சந்திரன் 11 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து யு.ஏ.இ தடுமாறியது. இருப்பினும் குர்ரம்கான் 43, சைமான் அன்வர் 62 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

மும்பையை பூர்வீகமாக கொண்டவரான யு.ஏ.இ விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டில் 36 ரன்களும், அம்ஜத் ஜாவித் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் யு.ஏ.இ 8 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து