முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.அப்போது மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு குறை பிரசவம், மூச்சுதிணறல் , குறைவான எடையுடன் பிறந்ததல் போன்றவை காரணம் என்று விளக்கமளித்தனர்.

விழுப்புரம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவுரைப்படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன், ஆகியோர் நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தனர். மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது. தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் தாடீநு சேடீநு நலனில் அரசு மருத்துவ நிலையங்களின் பங்கு மிகவும் சிறப்பாக இருப்பதன் காரணமாகத் தான், நாளொன்றுக்கு 1,800க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவ நிலையங்களில் பிறக்கின்றன. தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த 43 மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 30 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,751 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 134 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படும் காரணத்தினால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடாமல் அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவங்கள் பார்ப்பதினால்தான் இந்தியாவிலேயே மிக அதிக விழுக்காடான பிரசவங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன.

ஏனெனில், பிறக்கின்ற அனைத்து குழந்தைகளையும் மிகச் சிறப்பாக பராமரிக்கக்கூடிய அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளதால் மட்டுமே தான் தாடீநுமார்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடுகிறார்கள். அதுமட்டுமின்றி தனியார் 2 மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து அவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள பச்சிளம் குழந்தைகளையும் அரசு தாங்கி பிடித்து காப்பாற்றுகிறது. விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றும் இன்றும் சில பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இந்த இறப்பு அனைத்தும் குறை பிரசவம், குறைவான எடையுடன் பிறந்த குழந்தை மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு இயற்கையான காரணங்களால் தான் நிகழ்ந்துள்ளது. இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை. மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர்களான டாக்டர் சினுவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் அடங்கிய ஒரு மருத்துவக் குழு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு முகாமிட்டு அம்மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர். பதிவர்தினி அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தபோது, இம்மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிரிவில் இன்குபேட்டர், வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், முக்கிய உறுப்புகள் முதிர்ச்சியடையாத நிலையில் பிறக்கும் எடை குறைந்த குழந்தைகள், கருப்பையில் வளர்ச்சி குன்றிய குழந்தை போன்ற காரணங்களால் தான் சில குழந்தைகளுக்கு இறப்பு ஏற்படுகிறது என்றும், சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை என்றும், இறந்த குழந்தைகளுக்குகூட வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது என்றும், சிகிச்சை பலனின்றி சில குழந்தைகள் இறந்துவிட்டனர் என்றும், மருத்துவர்கள் மாண்புமிகு அமைச்சரிடம் ஆய்வின்போது தெரிவித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மருத்துவர்களை அறிவுறுத்தினர்கள். பின்னர் மருத்துமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா, நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் போதுமான அளவில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 103 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிக்கலான பிரசவங்களை கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உரிய நேரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிட மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் கர்ப்பகால பராமரிப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்கள். கர்ப்ப காலத்தில் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு உரிய சிகிச்கை அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2014-15-ஆம் ஆண்டு சுமார் 54,539 பிரசவங்கள் நிகந்துள்ளன. இதில் அரசு மருத்துவ நிலையங்களில் மட்டும் சுமார் 47,572 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. மாவட்டத்திலுள்ள 103 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பச்சிளம் குழந்தைகளை தாயுள்ளத்தோடு பராமரித்து பாதுகாக்கும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தாயின் பரிவோடு சேவையை தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் , மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது மருத்துவத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து