முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

திங்கட்கிழமை, 6 மே 2024      இந்தியா
JP-Natta 2023-09-12

Source: provided

பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாளுக்குநாள் அரசியல் கட்சிகளின் கருத்துகள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் கர்நாடக பாஜக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோரை விமர்சித்து காணொளி ஒன்று பகிரப்பட்டிருந்தது.

அதில், ஜாக்கிரதை என்று தலைப்பிட்டு, ராகுல் காந்தி சித்தராமையாவுடன் இணைந்து ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடுகளுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டையும் சேர்ப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்குவதால் அவர்கள் வளர்ந்து மற்றவர்களின் இடஒதுக்கீட்டை முழுவதும் பறிப்பதுமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இரு பிரிவுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, பாஜக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் அமித் மாளவியா மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து