முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு பாஜ 24 மணி நேர போராட்டம்: அமித் ஷா பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      அரசியல்
Image Unavailable

 திருவனந்தபுரம் - கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 5-வது ஆண்டு துவக்க விழாவை காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும். ஆளாகி வருவதாகவும் மாநில பாஜ கட்சி கருத்து தெரிவித்தது. மேலும் காங்கிரஸ் அரசின் ஊழல்களை கண்டித்து 24 மணி நேர தொடர் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தது. அதன்படி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு பாஜ கட்சியின் தொடர் போராட்டம் தொடங்கியது.

இதில் கட்சியின் மாநில தலைவர் முரளிதரன், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜகோபால் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தலைமை செயலகத்தின் எம்.ஜி.ரோடு வாயில் அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினர். விடிய விடிய நீடித்த இந்த போராட்டம் நேற்று மாலை 6 மணி வரை நடந்தது. நேற்றைய போராட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்றார். பின்னர் மாலையில் அதே பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக அந்த பகுதியில் பிரமாண்ட மேடை இரவோடு இரவாக அமைக்கப்பட்டது.

பொதுக்கூட்டம் முடிந்த பின்பு அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கேரளாவில் விரைவில் நடைபெற இருக்கும் பஞ்சாயத்து தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. பாஜக தொடர் போராட்டத்தை யொட்டி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று தலைமை செயலகத்தின் ஏனைய 4 வாயில்களும் பூட்டப்பட்டு அடையாள அட்டை இருப்பவர் மட்டுமே தலைமை செயலகத்திற்கு உள்ளே அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து