முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணிக்கு 2-வது இடம்

வியாழக்கிழமை, 25 ஜூன் 2015      விளையாட்டு
Image Unavailable

துபாய் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திலேயே நீடிக்கிறது. அதே நேரத்தில் வங்கதேசமே 8வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

3 ஒருநாள் போட்டிகளில் 2-ல் வங்கதேசம் வென்று சாதனை படைத்தது. இந்திய அணி கடைசி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணி 117 புள்ளிகளில் இருந்து 115 புள்ளிகளுக்கு குறைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருக்கிறது.88 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து வங்கதேசம் தற்போது 93 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இங்கிலான்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து