முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளிக்கு நாசா அனுப்பிய ராக்கெட் வெடித்துச் சிதறியது

திங்கட்கிழமை, 29 ஜூன் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க்: விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்ப அமெரிக்கா முயற்சியில் உருவான ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ராக்கெட் வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரவில்லை.  ஸ்பேஸ் எக்ஸ் என்ற இந்த ராக்கெட் இம்முறை 2 டன் எரிவாயு, 1500 பவுண்ட் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களோடு ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

கடந்த சில மாதங்களாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டு முயற்சியோடு அனுப்பிய 3 ராக்கெட்டுகளும் செயலிழந்து வெடித்தது சிதறியது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் தற்போது உள்ள 3 விஞ்ஞானிகளுக்கும் அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான பொருட்கள் அங்கு கைவசம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து