முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதன்கிழமை, 1 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பாலியல் பலாத்கார வழக்கை சமரச மையத்துக்கு பரிதுரைப்பது, பலாத்காரம் செய்த நபரையே பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  பலாத்கார வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், மத்தியப் பிரதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.  பாலியல் பலாத்கார வழக்குகளை சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கையாள்வதில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்த நபருடன் பெண் ஒருவருக்கு திருமணத்தை பரிந்துரைத்து வழக்கை சமரசம் செய்வதாக மத்தியப் பிரதேச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பாலியல் வழக்கில் சமரசம் பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது. திருமணம் என்ற பெயரில் சமரசம் செய்வதால் ஒரு பலாத்கார குற்றவாளி தங்கு தடையின்றி சுதந்திரமாக நடமாட நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்குகளை சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கையாள்வதில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகும்" எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மத்தியப் பிரதேச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதோடு, வழக்கை மறுவிசாரணை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் இதுபோன்ற ஒரு நிகழ்வு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து