முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.191 கோடி முறைகேடு: மகாராஷ்டிர கல்வி அமைச்சர் மீது புகார்

புதன்கிழமை, 1 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி களுக்கு தீயணைப்புக் கருவிகள் வாங்க ரூ. 191 கோடி ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடுகள் நடந் துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் டெண்டர் கோராமல் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கியிருப்பதாக கல்வி அமைச்சர் வினோத் டாவ்டே மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.  மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிகளுக்கு 62 ஆயிரத்து 105 தீயணைப்புக் கருவிகளை வாங்க மாநில அரசு திட்டமிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு தீயணைப்புக் கருவியையும் ரூ. 8321 விலையில் கொள்முதல்செய்து ஒரு பள்ளிக்கு தலா 3 கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.  ஆனால் தீயணைப்பு கருவி களை வாங்க மின்னணு முறையில் டெண்டர் கோராமல் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் கூறப்படு கிறது.

இந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வினோத் டாவ்டே மிகப் பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.  இதுகுறித்து அமைச்சர் டாவ்டே நிருபர்களிடம் கூறியதாவது: ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. நிதித்துறை ஆட்சேபம் தெரிவித்த மறுகணமே ஒப்பந்த ஆணையை நிறுத்திவிட்டோம் என்று தெரிவித்தார்.  முன்னதாக அமைச்சர் பங்கஜ முண்டே மீது ஊழல் புகார் எழுந்த பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் வேளையில் இன்னொரு அமைச்சர் மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளது ஆளும் பா.ஜ.க.விற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து