முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு மானியத்தை 10 லட்சம் பேர் புறக்கணித்தனர்

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, இந்தியா முழுவதும் இதுவரை சமையல் எரிவாயுக்கான மானியத்தை 10 லட்சம் பேர் புறக்கணித்துள்ளதாக இந்தியன் ஆயில் செயல் இயக்குனர் இந்திரஜித் போஸ் கூறினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (மும்பை) செயல் இயக்குனர் இந்திரஜித் போஸ் அளித்த பேட்டி வருமாறு:-சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை நேரடியாக பெறும் திட்டத்தில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண்ணை இணைக் கும் நடவடிக்கை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த திட்டம் தொடங்கிய மாதத்தில் இருந்து (ஜனவரி) மானிய தொகையை பெற்றுக்கொள்வதற்கான சலுகை ஜூன் 30-ந் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது.இந்தியா முழுவதும், அனைத்து எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களையும் சேர்த்து சுமார் 82 சதவீதம் பேர் இந்த திட்டத்தில் இணைந்துவிட்டனர். இதுவரை இந்த திட்டத்தில் சேராதவர்கள், இனிமேலும் சேரலாம். ஆனால் திட்டம் தொடங்கிய நாளில் இருந்து மானியத்தை பெறமுடியாது. திட்டத்தில் சேர்ந்த மாதத்தில் இருந்து மானிய சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். திட்டத்தில் சேராமல் இருந்தால் சந்தை விலையில் சமையல் எரிவாயு வாங்க வேண்டியதிருக்கும்.ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்பைப் பெற்றிருப்பது, போலி ஆவணங்களுடன் இணைப்பை பெற்றிருப்பது உள்பட சில இணைப்புகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவே 3 முதல் 4 சதவீதமாக உள்ளது.அதுபோல எரிவாயு மானியம் வேண்டாம் என்று (கிவ் இட் அப்) அதை விட்டுக்கொடுத்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியா முழுவதும் 10 லட்சத்தை தாண்டுகிறது. இந்த மாதம் 9-ந் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 10 லட்சத்து 5 ஆயிரத்து 791 பேர் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 67 ஆயிரத்து 96 பேர் விட்டுக்கொடுத்துள்ளனர்.

அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். குறைந்தபட்சமாக கேரளாவில் 3 ஆயிரத்து 858 பேர் மானியத்தை தவிர்த்துள்ளனர். டெல்லியில் 1.53 லட்சம் பேர் மானியத்தை விட்டுவிட்டனர். இதன்மூலம் மத்திய அரசுக்கு நிதிச்சுமை குறையும்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும், குறையும்போதும் பெட்ரோல், டீசலின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது இந்த எரிபொருட்களின் விலை அதற்கேற்றபடி குறைவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.மத்திய அரசுக்கான வருவாய் பெரும்பாலும் பெட்ரோல், டீசல் விற்பனையின் மூலம் வருகிறது. இதற்காக கலால் உள்பட வரி வரம்புகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிர்ணயித்துள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை இறங்கும்போது, வரிகளில் அதற்கேற்றபடி மாற்றம் செய்யாவிட்டால், பெட்ரோல், டீசல் விலை குறைப்பை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்த முடியாது.மற்ற சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பது, அங்கு விதிக்கப்படும் வரியின் அளவின் அடிப்படையில் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து