விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னீஸ்:6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்

சனிக்கிழமை, 11 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன் - விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டம் 6-வது முறையாக வென்றார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். நேற்றை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸாவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார். இது அவரது தொடர்ச்சியான 4-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இத்துடன் 21 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். 

தொடக்கத்தில் மந்தமாக ஆடிய செரீனா மொத்தம் 8 டபுள் பால்ட்களைத் தனது சர்வில் செய்தார், மேலும் முடிக்கும் போதும் பதட்டத்துடன் முடித்தார். அடுத்ததாக வரும் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் ஒரே சீசனில் 4 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்ற சாதனையை நிகழ்த்துவார். ஸ்டெஃபி கிராப் இந்தச் சாதனையை 1988-ம் ஆண்டு நிகழ்த்தினார். முதல் செட்டில் 2-4 என்று பின் தங்கியிருந்தார் செரீனா வில்லியம்ஸ், ஆனால் அதன் பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பேக்ஹேண்ட், ஃபோர்ஹேண்ட்,வாலி ஷாட்களில் கலக்கி 5 தொடர் கேம்களை வென்று முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-1 என்று முன்னிலை பெற்று சடுதியில் போட்டியை வெல்ல முடியவில்லை.

முகுருஸாவும் இளைத்தவர் இல்லை, அவர் எதிர்கால நட்சத்திரம் ஆவார். வில்லியம்ஸ் சர்வை முறியடித்து 2-5 என்று வந்தார் முகுருஸா, பிறகு மேட்ச் பாயிண்ட்டிலிருந்து தப்பித்த முகுருஸா 5-வது பிரேக் பாயிண்டை வென்று 4-5 என்று வில்லியம்சை மிரட்டினார்.  கடைசியில் முகுருஸா சர்வை முறியடித்தார் வில்லியம்ஸ், முருகுஸா, தனது ஷாட்டை வைடாக அடிக்க செரீனா மகிழ்ச்சியுற்றார்.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து