முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      உலகம்
Trump 2024 08 17

நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களுக்கு புதன்கிழமை அதிபர் ட்ரம்ப் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

“நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த ஏழு மாதங்களாக, ஒரு வெளிநாட்டினர்கூட சட்டவிரோத நமது நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இது முற்றிலும் சாத்தியமற்றது என்று அனைவரும் கூறிய ஒரு சாதனையாகும்.

நான் அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்துள்ளேன். 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்தேன், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்தேன். இதனால், 3000 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியுள்ளேன். மேலும் உயிருடனும் பிணமாகவும் இருந்த அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தேன். 

ஏற்கெனவே, அமெரிக்காவில் 18 டிரில்லியன் டாலர் முதலீட்டை நான் ஈர்த்துள்ளேன். இதன்பொருள், வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வுகள், வளர்ச்சி, தொழிற்சாலைகள் திறப்பு மற்றும் மிகச் சிறந்த தேசிய பாதுகாப்பு ஆகும். இந்த வெற்றியின் பெரும்பகுதி வரிகளின் மூலம் சாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை - வரிகள். பல தசாப்தங்களாக மற்ற நாடுகள் நமக்கு எதிராக இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்தன. ஆனால் இனி அது நடக்காது. அமெரிக்காவில் நிறுவனங்களைக் கட்டினால் வரிகள் இல்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், நாம் இதுவரை கண்டிராத அளவில் தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் அமெரிக்காவில் அவர்கள் கட்டி வருகின்றனர்.

14,50,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன்பாக சிறப்புப் போர்வீரர் ஈவுத்தொகை வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். 1776-ல் நமது தேசம் நிறுவப்பட்டதைக் கௌரவிக்கும் விதமாக, ஒவ்வொரு வீரருக்கும் 1,776 டாலர்களை (இந்திய மதிப்பின்படி ரூ. 1.60 லட்சம்) வழங்கவுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து