முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: வங்கதேசம் கைப்பற்றி சாதனை

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மிர்புர் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி வங்க தேசம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மிர்புர் நகரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி, வங்கதேசத்திற்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் 40 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 40 ஒவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 168 எடுத்தது. வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன் அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். டக்வொர்த் விதிப்படி 40 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கி விளையாடியது. வங்கதேச அணி 26.1 ஒவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 170 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிம் இக்பால் 61 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி ஒரு நாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 3 முறை தொடரை வங்கதேசம் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து