Idhayam Matrimony

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாட்டில் 12.34 லட்சம் பேர் பயன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      தமிழகம்
Ma Subramani

சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை 12.34 லட்சம் பேர் பயன்பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (27.12.25) பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகிநகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி சென்னையில் ஒரு மிக பெரிய வகையிலான புதிய மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார். “நலம் காக்கும் ஸ்டாலின்” என்கின்ற அந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு 3 என்கின்ற வகையிலும் சென்னை பெருநகராட்சியில் 15 இடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகள் 19 வட்டாரங்களிலும் தலா 3 என்கின்ற வகையிலும் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த முகாம்களைப் பொறுத்தவரை நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற முகாம் வெறும் மருத்துவ முகாமாக மட்டுமல்லாமல் முழு உடல் பரிசோதனை என்கின்ற வகையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 21வது வாரத்தில் 26வது முறையாக நேற்று முகாம்கள் நடைபெற்றது. சென்னையோடு இணைந்து 31 மாவட்டங்களில், 44 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 

மேலும் இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் முழு உடல் பரிசோதனை என்கின்ற வகையில் முழுமையாக மருத்துவ பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12,34,908 பேரும் முழு உடற் பரிசோதனை என்கின்ற வகையில் மகத்தான பலனைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற சீரிய திட்டத்தில் இந்த முகாம்களில் பயன்பெறுபவர்கள் அங்கிகரிக்கபட்ட காப்பீட்டு திட்டத்திற்கான அட்டைகளையும் உடனடியாக பெற்று செல்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து