எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் ரோசய்யா - தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரோசய்யா:– கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாக திருநாளான இந்த பண்டிகை சகோதரத்துவம், நல்லிணக்கத்தை மேம்படுத்தட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:– தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.‘இஸ்லாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இஸ்லாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும்.இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன் பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–தியாகத் திருநாள் என்று கூறப்படும் பக்ரீத் பண்டிகையை, இஸ்லாமிய சமுதாய மக்கள் குர்பானி வழங்கி கொண்டாடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழுகின்ற, சமதர்ம நெறியை போற்றும் வகையில் குர்பானி வழங்கி கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்:– இந்த வருடம் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் முதல் பிறை தெரிந்ததால் வருகின்ற 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.ஏழை, எளிய மக்களுக்கு உதவுகின்ற இந்த தியாகத் திருநாளில் நாம் “நமது இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது அன்பு பாராட்டுவோம்; அவர்களுக்கு அரணாக இருப்போம்; அவர்களையும் அரவணைத்து இந்தியாவை வளமும், வலுவும் உள்ள நாடாக உருவாக்குவோம்’’ என சபதம் ஏற்போம்.இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:– ‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வரும் ம.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:– உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ‘‘தியாகத்திருநாள்’’ என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகையாகும்.இந்த இனிய திருநாள் உலகெங்கும் எந்நாளும் சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாகவும், சமத்துவமும் சமாதானமும் நிலைத்திருக்கும் விதமாகவும், அனைத்து இதயங்களிலும் அன்பைப் பரிமாறும் நன்னாளாகப் பரிணமிக்கட்டும்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:– இப்ராஹிம் நபி இறைவன் ஒருவனே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தம்முடைய மார்க்கத்தின் செய்தியாக அளித்தவர். அவரின் இறைபக்தி எல்லையிலாது, ஈடில்லாதது. தம்முடைய மகனான இஸ்மாயிலை அவனுடைய முழு சம்மதத்துடன் இறைவனுக்கு காணிக்கையாக்க முனைந்த தியாக செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளே ஹஜ் பெருநாள் என்னும் பக்ரீத் பெருநாளாகும்.இந்த புனித திருநாளாம் பக்ரீத் நந்நாளில், நாட்டு மக்கள் அனைவரும் மதவேற்றுமைகளை கடந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் நாட்டினை எதிர் நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க சூளுரை மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் வருமாறு:– அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகி தலைவர் டாக்டர் சேதுராமன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இளையத்துல்லா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில்100-க்கும் மேற்பட்டோர் பலி
13 May 2025பமாகோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
எல்லை வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
13 May 2025புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார
-
கேரளாவில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்
13 May 2025திருவனந்தபுரம் : அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
-
எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
13 May 2025ஸ்ரீநகர் : சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அதிமையான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டிக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை
13 May 2025உதகை : உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆன்மிக குருவுடன் கோலி சந்திப்பு
13 May 2025இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார்.
-
திடீர் ஓய்வு அறிவிப்பு: கோலி மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி
13 May 2025மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி கோலியின் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
13 May 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
எங்களை சீண்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
13 May 2025பிஜீங் : அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
நியூயார்க்கில் சாலை விபத்து: 2 இந்திய மாணவர்கள் பலி
13 May 2025நியூயார்க் : நியூயார்க்கில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: ஆஸி. - தென்ஆப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
13 May 2025மெல்போர்ன் : 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2025
14 May 2025 -
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மே 17-ல் தொடங்கும் : பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 May 2025மும்பை : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
-
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.