முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தலில் கமலஹாசன் தூண்டுதல் இல்லை : நாசர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகர் சங்க தேர்தலில் கமலஹாசன் தூண்டுதல் இல்லை என்று நடிகர் நாசர் விளக்கம் அளித்தார். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து  தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடுகிறார். தேர்தலுக்ககு ஒரு நாளே இருக்கும் நிலையில் நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் நாசர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்ததேர்தலில் நடிகர் கமலஹாசன் தூண்டுதலின் பேரில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவது கூறுவதுதவறானது. அவர் எனது நண்பர்.

அவரது படங்களில் நான் தொடர்ந்து நடிப்பதால் தூண்டி விட்டதாக கூற முடியாது. கதா பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்கிறார். இந்த தேர்தலில் பின்  விளைவுகளைப்பற்றி கவலைப்படவில்லை. விஷால், கார்த்தி பொன் வண்ணன், ஆகியோர் எந்த பிரதி பலனும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் தேர்தலில் நிற்கிறார்கள். இவ்வாறு நடிகர் நாசர் தெரிவித்தார்.

விஷால் அணி சார்பில் நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் நிற்கிறார். துணை தலைவர் பதவிக்கு கருணாஸ், பொன் வண்ணன் ஆகியோரும், பொருளாளார் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். ரோகிகனி தலைமையில் விஷால் அணியினர் வீடு வீடாகச்சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இரண்டு அணியினரும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்