முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ள பாதிப்பு எதிரொலி: அதிமுக நிர்வாகிகள் இல்லத் திருமணவிழா ரத்து

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, வரும் டிசம்பர் 6 ம்தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைக்க இருந்த திருமண விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 6 ம்தேதி அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்த இருந்த 14 கழக நிர்வாகிகளின் இல்லத்திருமணங்களும் வரும் 6ம்தேதி முதல் நடத்தப்பட இருந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரவினர் சார்பில் மாவட்ட வாரியாக நடத்தப்பட இருந்த ஆலோசனை கூட்டங்களும் தற்போதைய பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்